முதியவர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


முதியவர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x

முதியவர்கள் வாக்களிக்க

ஈரோடு



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்த படிவம் 12டி பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கிட தெரிவிக்கப்பட்டது.

படிவம் 12டி போதிய விபரங்களுடன் பூர்த்தி செய்து வழங்கிய வாக்காளர்கள், தபால் மூலம் தங்கள் வாக்கினை செலுத்த படிவம் 12டி -இல் குறிப்பிட்டு உள்ள இருப்பிடத்திற்கு அஞ்சல் வாக்குசீட்டு சேகரிக்கும் குழுக்கள் வருகிற 16-ந்தேதி மற்றும் 17-ந்தேதி ஆகிய தினங்களில் வர உள்ளனர். சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லையெனில், இறுதிவாய்ப்பாக 2-வது முறை வருகிற 20-ந்தேதி அன்று வர உள்ளனர். படிவம் 12டி போதிய விபரங்களுடன் பூர்த்தி செய்து வழங்கிய வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வாக்கினை செலுத்தலாம். தவறும் பட்சத்தில் தேர்தல் நாளான வருகிற 27-ந்தேதி வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்க முடியாது.

மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.


Next Story