எஸ்.எஸ்.எல்.சி.-பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி


எஸ்.எஸ்.எல்.சி.-பிளஸ்-2 முடித்த  மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி
x

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.-பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.

கரூர்

பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியானது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 192 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 640 மாணவர்களும், 5 ஆயிரத்து 362 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 2 பேர் தேர்ச்சி பெற்றனர். கரூர் மாவட்டத்தில் 83 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளிகளில் 75.81 சதவீதமும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 83.11 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 96.97 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதேபோல் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 112 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 305 மாணவர்களும், 5 ஆயிரத்து 158 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 463 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 92.37 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளிகளில் 86.54 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.07 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 98.75 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

இந்நிலையில் நேற்றுமுதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று முதல் எஸ்.எஸ்.எல்.சி.- மற்றும் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான தற்காலிக சான்றிதழ்கள் பள்ளிகளில் வழங்கும் பணி தொடங்கியது. .மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று சென்றனர். கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயராணி மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்கினார். அப்போது பள்ளி ஆசிரியைகள் உடனிருந்தனர்.


Next Story