1,036 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
1,036 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இலுப்பூர் அருகே திருநல்லூரில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பேசினார். முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசு துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழி முறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், 1,036 பயனாளிகளுக்கு ரூ.2,37,96,983 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதாராமு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.