நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட் - மீனவர்களுக்கு அதிரடி உத்தரவு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட் நாளை காலை 6:30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,
பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட்டை நாளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. சிங்கப்பூரின் டி.எஸ்.-எஸ்.ஏ.ஆர் என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து நாளை காலை 6:30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இதற்கான கவுண்டவுன் இன்று காலை தொடங்கிய நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், பழவேற்காடு மீனவர்கள் நாளை வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story