பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைகற்றை ஒதுக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். கோபுரங்களை தனியாருக்கு கொடுக்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
என்.எப்.டி. சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். சேவா பி.எஸ்.என்.எல். மாவட்ட செயலாளர் விஜய் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டராஜ், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சூசை மரிய அந்தோணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜகோபால், சீதாலட்சுமி, சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story