பெயர் மாற்ற புதுக்கோட்டை கிளை அச்சகத்தில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்
பெயர் மாற்ற புதுக்கோட்டை கிளை அச்சகத்தில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கலாம் Apply2023-2024-ம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது ``எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம், சென்னை, மதுரை மற்றும் திருச்சி அரசு கிளை அச்சகங்களில் தற்போது துணை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதற்காக, பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்" என அறிவிப்பு செய்தித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலனுக்காக புதுக்கோட்டையில் அரசு கிளை அச்சகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை e-Challan மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் பெறப்படும். பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம், இயக்குனரால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.