தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடிப்பு
திருமயம் நகருக்குள் வராத தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
பஸ் சிறைபிடிப்பு
திருமயம் பஸ் நிலையத்திற்குள் தனியார் பஸ்கள் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது. இதனால் பயணிகள் இரவும் நேரங்களிலும், அதிகாலையிலும் அதிக நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதையடுத்து திருமயம் நகருக்குள் தனியார் பஸ் வராததை கண்டித்து அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை பொதுமக்கள் இன்று காலை சிறைபிடித்தனர்.
பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் திருமயம் பஸ் நிலையத்திற்கு வந்து தான் பஸ்கள் திருமயத்தை கடந்து செல்ல வேண்டும் என கூறினார்கள். இல்லை என்றால் திருமயத்திற்கு உங்களைப் போன்ற பஸ் வேண்டாம் என்று கோபமாக கூறினர்.
திருமயத்திற்குள் வந்து தான் செல்லும்
அதனை தொடர்ந்து பொதுமக்கள் தனியார் பஸ் உரிமையாளருக்கு பஸ் திருமயம் நகருக்குள் வருவதில்லை என தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உரிமையாளர் பஸ் கண்டிப்பாக திருமயம் உள்ளே சென்று தான் செல்லும் என்று கூறினார். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை பொதுமக்கள் அங்கிருந்து விட்டனர். இதையடுத்து அங்கு வந்த திருமயம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைந்து போக வலியுறுத்தினர்.