அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும்


அரசு போக்குவரத்து பணிமனை   அமைக்க வேண்டும்
x

சிங்கம்புணரியில் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து பணிமனை

சிங்கம்புணரி பேரூராட்சி கடந்த 2016-ல் சிங்கம்புணரி ஒன்றியம், மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களை இணைத்து சிங்கம்புணரி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. சிங்கம்புணரியை சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நகர் பகுதியில் மட்டும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள். சிங்கம்புணரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பொரி தயாரித்து வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

மேலும் விவசாயம், இரும்பு தொழிற்சாலைகள், நூற்பாலைகள் என பலதரப்பட்ட தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொழிலுக்கு தேவையான பொருட்கள், மற்றும் ஆடர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் பெருநகரங்களில் இருந்து கிடைக்கிறது. இதனால் பெருநகரங்களுக்கு செல்லக்கூடிய வகையில் சிங்கம்புணரியில் இருந்து நேரடி பஸ்களை இயக்கவும், மேலும் புதிதாக போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கூறுகையில், தொழில் நகரமாக திகழ்கின்ற சிங்கம்புணரியில் சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற பெருநகரங்களுக்கு செல்ல சிங்கம்புணரியில் இருந்து பல பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தினமும் 5-ல் இருந்து 10 தனியார் பஸ்கள் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு செல்கின்றது. விழா காலங்களில் தனியார் பஸ் கட்டணங்கள் பன்மடங்கு உயர்கின்றது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சிங்கம்புணரி நகர் பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும். தனியார் பஸ்களின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், சிங்கம்புணரியில் இருந்து பெரு நகரங்களுக்கு நேரடியாக செல்லும் வகையில் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.


Next Story