கல்குவாரியில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
கூடங்குளம் அருகே கல்குவாரியில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
திருநெல்வேலி
வடக்கன்குளம்:
கூடங்குளம் அருகே இருக்கன்துறை கிராமத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் நேற்று முன்தினம் அதிகாலையில் பாறைகளை வெடி வைத்து தகர்த்தனர். அப்போது அதிகளவு வெடி மருந்துகளை பயன்படுத்தியதால் பயங்கர சத்தம் சுற்று வட்டார பகுதிகளில் எதிரொலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அந்த கல்குவாரியின் நுழைவுவாயிலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இதுதொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story