மாவட்டத்தில் 5 இடங்களில் பொதுவினியோக திட்ட குறைகேட்பு கூட்டம்
தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் பொதுவினிேயாக திட்ட குறைகேட்பு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் குறைகேட்பு கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) இந்த கூட்டம் நடக்கிறது. தேனி தாலுகாவில் கொடுவிலார்பட்டியிலும், பெரியகுளம் தாலுகாவில் குள்ளப்புரத்திலும், ஆண்டிப்பட்டி தாலுகாவில் எம்.சுப்புலாபுரத்திலும், உத்தமபாளையம் தாலுகாவில் பண்ணைப்புரத்திலும், போடி தாலுகாவில் மீனாட்சிபுரத்திலும் இந்த கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு பொதுவினியோக திட்டத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம். ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் குறித்தும் மனு அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.