பொதுவினியோக திட்ட மனுநீதி நாள் முகாம்
அகரக்கொந்தகையில் பொதுவினியோக திட்ட மனுநீதி நாள் முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி ஆலங்குடிச்சேரியில் மாவட்ட வட்ட வழங்கல் பிரிவின் சார்பில் பொது வினியோக திட்ட மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் யசோதா தலைமை தாங்கினார். திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தரவளவன் முன்னிலை வகித்தார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், கடை மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை விண்ணப்பம், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட 64 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலத்தூர் பாலசுப்பிரமணியன், அகரக்கொந்தகை தமிழரசி பக்கிரிசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், அன்பரசி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story