பொது வினியோக திட்ட மக்கள் தொடர்பு முகாம்


பொது வினியோக திட்ட மக்கள் தொடர்பு முகாம்
x

பொது வினியோக திட்ட மக்கள் தொடர்பு முகாம்

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சுற்றறிக்கையின்படி நாகை மாவட்ட வட்ட வழங்கல் பிரிவின் சார்பில் பொது வினியோக திட்ட மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், கடை மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை விண்ணப்பம், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்பத்தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட 12 வகையான கட்டுமாவடி, தண்டாளம், கோதண்டராஜபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் 47 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. முகாமில் திருமருகல் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் குமரேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஷோபா பாரதிமோகன், ஊராட்சி செயலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story