பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்


பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
x

பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

கரூர்

கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ேநற்று பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் கரூர் வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கினர்.

இதேபோல் புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமை தாங்கினார். முகாமில் புகழூர் தாலுகாவிற்குட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர்.


Next Story