தாலுகா அலுவலகங்களில் சனிக்கிழமை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் சனிக்கிழமை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் நாளை(சனிக்கிழமை) பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் மாதம் தோறும் நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. இந்த முகாமில் மின்னணு ரேஷன்கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.
குடும்பத்தலைவரின் புைகப்படம்...
மேலும் மின்னணு ரேஷன்கார்டுகளில் உள்ள தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த முகாமில் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன் பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனுசெய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.