தென்பெண்ணை ஆற்றுத் திருவிழாவை காண குவிந்த பொதுமக்கள்...!
தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் ஆற்று திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் ஆற்று திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மணலூர்பேட்டையில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கலந்து கொள்வது தனி சிறப்பாகும்.
இதுதவிர சுற்றியுள்ள சுமார் 10 கிராமங்களில் இருந்து வரும் உற்சவ மூர்த்திகளுக்கும் தீர்த்தவாரி நடைபெறும். இதேபோல் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் சுமார் 10-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். இதில் சுமார் 1½ லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வாா்கள்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் கூட்டம் இன்றி சம்பிரதாயத்திற்கு நடைபெற்றது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடக்கும் தென்பெண்ணை ஆற்று திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.