பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்


பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
x

காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து அலுவலர்கள் பங்கேற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். அரசு டாக்டர் பிரபாகரன், சீர்காழி குழந்தைகள் ஊட்டச்சத்து வளர்ச்சி மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, வட்டார மேற்பார்வையாளர் மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி உறுப்பினர் முத்துவேல் வரவேற்றார். சீர்காழி ஒன்றிய ஆணையர் இளங்கோவன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆணையர் துறை ரீதியாக பிரித்து அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேணுகா மணிகண்டன், வேளாண்மை உதவி அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அதிகாரி ராஜாமணி, சுகாதார ஆய்வாளர் துரை கார்த்திக் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். முகாமையொட்டி மருத்துவ முகாம், ஊட்டச்சத்து கண்காட்சி ஆகியவையும் நடந்தன.


Next Story