பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் நீதிமன்ற தீர்ப்பின்படி 7.11.2008-க்கு முன்உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், காலியாக உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story