பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். காலிப்பணியிடங்கள் இருக்கிற நிலையில் தகுதியுள்ள நபர்கள் இருந்தும் சுகாதார ஆய்வாளர் நிலை-1 பதவி உயர்வில் ஏற்படுத்தப்படும் வீண் காலதாமதத்தை தவிர்த்து சுகாதார ஆய்வாளர் நிலை-1 பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், 2014-க்கு பின் சுமார் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தில் 5 சதவீத தனி ஊதியத்தை வழங்க வேண்டும், பயோ மெட்ரிக் வருகைப்பதிவை கட்டாயப்படுத்தக்கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பொருளாளர் கொளஞ்சியப்பன், துணைத்தலைவர் சீனிவாசன், இணை செயலாளர் ராமலிங்கம், நிர்வாகிகள் முருகானந்தம், ராஜராஜன், ராஜி, காளிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story