இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை


இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி 7-வது வார்டிற்குட்பட்ட 25 கிராம ஊராட்சிகள், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெட்டுக்காடு கிராம ஊராட்சி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பட்டு கிராம ஊராட்சி, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்குடி மற்றும் செங்கீரை கிராம ஊராட்சிகளுக்கு, வாக்காளர்கள் வாக்களித்திட ஏதுவாக இன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளித்திட அரசு அறிவித்துள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கவிதாராமு தெரிவித்து உள்ளார்.

இதேபோல் திருச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொழிலாளர்கள் புதுக்கோட்டையில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இதனை உறுதி செய்ய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே விடுமுறை தொடர்பான புகார்கள் இருந்தால் புதுக்கோட்டை தொழிலாளர் துணை ஆய்வர் நடராஜன்- 99421 31921, தொழிலாளர் உதவி ஆய்வர்கள் குணசீலன்- 98945 74212, அறிவின் செல்வம்- 97914 74764 ஆகியோரின் எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story