தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x

நெல்லையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நெல்லை டவுன் வாகையடி முனையில் நடந்தது. முன்னாள் பகுதி செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். வட்டச்செயலாளர் புயல் மீனாட்சி, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அப்துல் சுபஹானி, பகுதி செயலாளர் ரவீந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், நெல்லை மாநகர ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தற்போது தான் வேகமாக நடைபெற்று வருகிறது. இதைப்போல் பல்வேறு திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது, என்றார்.

கூட்டத்தில் செய்தி தொடர்பு இணைச்செயலாளர் சிவ.ஜெயராஜ், நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, மகளிர் அணி செயலாளர் சவுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நடித்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படம் நெல்லையில் உடையார்பட்டி ராம் தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு தியேட்டர்களிலும் திரையிடப்பட்டது. இதையொட்டி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில், தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். நற்பணி மன்ற மாநில துணை செயலாளர் ரிச்சர்ட் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார். மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காசிராஜன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நெல்லை மாநகர தலைவர் கே.சி.ஆர்.பாலா, செயலாளர் செல்வபாபு, பொருளாளர் குரு ஜெசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story