காட்டுமன்னார்கோவிலில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு


காட்டுமன்னார்கோவிலில்   தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு
x

காட்டுமன்னார்கோவிலில் நடந்த தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டாா்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவிலில் ஒன்றிய, நகர தி.மு.க. மற்றும் இளைஞர் அணி சார்பில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சண்முகம், அவை தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கணேசமூர்த்தி வரவேற்றார்.

இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், செய்தி தொடர்பு இணை செயலாளர் ஜெயராஜ், தலைமை பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழகத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத்திறன் காரணமாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட கடன்களை அடைத்து முன்னேறி வருகிறோம். தேர்தல் வாக்குறுதியில் அளித்த குடும்ப பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித்தொகையை விரைவில் அளிப்போம்.

72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுகிறார். முதலில் அவர் கரூரில் இருந்து மக்களை அழைத்து வரட்டும்.

அதன் பிறகு அவர் என்ன சவால் விட்டார் என்பதை பார்க்கலாம்.

எத்தனையோ சவால்களை எல்லாம் பார்த்து வளர்ந்த கட்சி தான் தி.மு.க. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சவாலையெல்லாம் தெளிவாக சந்திப்பார் என்றார் அவர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் தங்க ஆனந்தன், சோழன், கோவிந்தசாமி, நடராஜன், கோவிந்தராஜன், ஒன்றிய துணை செயலாளர் கே.டி. பாலம் மணிகண்டன், ஒன்றியக்குழு தலைவர் சகதியா பர்வீன் நிஜார், மாவட்ட பிரதிநிதிகள் கல்யாணசுந்தரம், பூக்கடை செந்தில், உத்திராபதி, நகர பொருளாளர் மணிமாறன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர துணை செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story