தி மு க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி மு க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

மேல் நாரியப்பனூரில் தி மு க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

தி.மு.க. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் மேல்நாரியப்பனூரில் நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம்கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சின்னசேலம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான சத்தியமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறை துணை செயலாளர் கிரிராஜன், தகவல் தொழில் நுட்ப அணி துணைசெயலாளர் சேகர் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மூக்கப்பன், ராமமூர்த்தி, காமராஜ், முருகன், கென்னடி, பெருமாள், சண்முகம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி, கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் சுப்பராயலு, மாவட்டக்குழு உறுப்பினர் கலையரசி, ஒன்றிய கவுன்சிலர் சுதா மணிகண்டன், ஊராட்சி தலைவர் தனலட்சுமி கோவிந்தன், துணைத்தலைவர் ராசாத்தி ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டபொறுப்புக்குழு உறுப்பினர் என்.கே.சேகர் நன்றி கூறினார்.


Next Story