தி மு க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி மு க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

வாணியந்தல் கிராமத்தில் தி மு க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வாணியந்தல் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், ஆறுமுகம், அன்புமணிமாறன், நகர செயலாளர்கள் ஜெயவேல், தாகப்பிள்ளை, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர்கள் பொள்ளாச்சி உமாபதி, நெல்லை ரவி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து பேசினார்கள். இதில் நகர செயலாளர்கள் கிருஷ்ணன், சின்னத்தம்பி, ஒன்றியக்குழு தலைவர்கள் திலகவதி நாகராஜன், சந்திரன், பேரூராட்சி தலைவர்கள் பன்னீர்செல்வம், ரோஜாரமணி, மாவட்ட கவுன்சிலர் அகிலாபானு அருள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள் நன்றி கூறினார்.


Next Story