தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

கூட்டேரிப்பட்டில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

விழுப்புரம்

மயிலம்

கூட்டேரிப்பட்டில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளரும், வக்கீலுமான முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில தீர்மான குழு துணை தலைவருமான டாக்டர் மாசிலாமணி, மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தெற்கு ஒன்றிய செயலாளர் துரை, ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சட்டத்துறை இணை செயலாளரும், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன், மாவட்ட செயலாளரும், சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான், தலைமை கழக பேச்சாளர் அதியமான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். இதில் மாநில மருத்துவர் அணியின் முன்னாள் செயலாளர் டாக்டர் சேகர், மாவட்ட தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, வெண்ணி ஏஜென்சி மற்றும் என்.வி.எஸ். சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் நெடி சுப்பிரமணி, மாநில விவசாய அணி இணை செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், சிறுபான்மை பிரிவு அணி அன்சாரி, வர்த்தகர் அணி பிரிவு செழியன், ஆலகிராம ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், கொள்ளியங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் வர்ண முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டேரிப்பட்டு கிளை செயலாளர் இனாயத்துல்லா நன்றி கூறினார்.


Next Story