காவிரி படுகையை பாதுகாக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம்


காவிரி படுகையை பாதுகாக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம்
x

காவிரி படுகையை பாதுகாக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

எண்ணெய்-எரிவாயு திட்டங்களில் இருந்து காவிரிப்படுகையை பாதுகாக்க வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அப்துல்சமது, திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, எஸ்.டி.பி.ஐ. மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில், வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, முழுகாவிரி படுகையையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட வரம்புக்குள் தமிழக அரசு கொண்டு வரவேண்டும். காவிரிப்படுகையில் உரிமைக்காலம் முடிந்த எண்ணெய் கிணறுகளை அடையாளம் கண்டு அதனை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.







Related Tags :
Next Story