ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கன்னியாகுமரி
கொல்லங்கோடு:-
கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இதன் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்திலும் சிலர் குடிசை போட்டு வசித்து வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் கோலப்பன் தலைமையில் கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு அந்த வீட்டை விட்டு வெளியே வர மறுத்தனர். ஆதிதிராவிட மக்களாகிய நாங்கள் இதே இடத்தில் வசிக்க எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர். இதனையடுத்து சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதனால் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் முடிவை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story