டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

நாகுடி அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில் நாகுடி அருகே சீனமங்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

இதில் தங்கள் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும், அந்த இடத்தின் அருகே பள்ளி, கோவில்கள், பொதுமக்கள் குடியிருப்புகள் இருந்து வருகிற நிலையில், புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். மேலும் மக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

327 மனுக்கள்

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 327 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். மேலும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story