சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x

மயிலாடுதுறை அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சியில் மணல்மேடு சாலையையும், கல்லணை சாலையையும் இணைக்கும் வகையில் காமராஜர் தெரு வழியாக 1½ கி.மீ.தூர சாலை உள்ளது. இந்த காமராஜர் தெருவில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்ட காமராஜர் தெரு சாலை தற்போது சேதமடைந்து குண்டும் குழியுமாக காப்படுகிறது.

இந்த சாலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் திருவிழந்தூர் பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் அன்பரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மாதத்திற்குள் காமராஜர் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- மணல்மேடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story