ஐஸ் தொழிற்சாலைைய எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்


ஐஸ் தொழிற்சாலைைய எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்
x

ஐஸ் தொழிற்சாலைைய எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

கன்னியாகுமரி

கருங்கல்:

கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட கம்பிளார் நெல்லிவிளைப் பகுதியைச் ஒருவர் அரசு அனுமதி பெற்று ஐஸ் தொழிற்சாலை (ஐஸ் பிளான்ட்) நடத்தி வருகிறார். இதற்காக அந்த பகுதியில் 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது எனக்கூறி தொழிற்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் கிள்ளியூர் பேரூராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் டென்ஸ் குமார் தலைமையில் பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கவுன்சிலர் டென்ஸ் குமார் உள்பட 140 பேர் மீது கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story