பாதையை திறந்து விடக்கோரி பொதுமக்கள் மறியல்


பாதையை திறந்து விடக்கோரி பொதுமக்கள் மறியல்
x

பாதையை திறந்து விடக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதி பொதுமக்கள் கடந்த 40 ஆண்டுகளாக பாதையாக பயன்படுத்தி வந்தாக கூறப்படுகிறது. அந்த பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்சாலை அமைப்பதற்காக மண் கொட்டியதால் திருவேங்கடம் சர்வேயரை வைத்து அளந்து, மேற்படி பாதை தனது பட்டா நிலத்தில் வருகிறது என்று கூறி கம்பி வேலி அமைத்து அப்பாதையை அடைத்து விட்டாராம். பாதையை திறந்து விடக்கூறி அப்பகுதி மக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தனராம். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வைத்தார்.


Next Story