குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறந்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
ராஜபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை
ராஜபாளையம் அருகே செண்பகத்தோப்பு சாலையில் அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று மதியம் திடீரென்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. கடை அருகில் மத்திய சுங்க இலாகா அலுவலகமும், மேல்நிலைப்பள்ளியும், குடியிருப்புகளும் உள்ளன. கூலி ெதாழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அனைவரும் திரண்டு வந்து டாஸ்மாக்கடை முற்றுகையிட்டனர். அம்பேத்கர் நகர், பி.எஸ்.கே. மாலையாபுரம், திருவள்ளுவர் நகர், பச்சை காலனி, தென்றல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் திரண்டனர்.
முற்றுகை போராட்டம்
பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணைசூப்பிரண்டு பிரீத்தி, வடக்கு இன்ஸ்பெக்டர் ராஜா, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டாஸ்மாக் கடை அகற்றும் வரை போராட்டம் கைவிட மாட்டோம் என அவர்கள் உறுதியாக கூறினர். நாளை காலை (அதாவது இன்று) டாஸ்மாக்கடை அகற்றப்படும் என போலீசார் கொடுத்த உறுதியின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.