குடிநீர் வழங்க கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
திருவெண்காடு அருகே மணிகிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே மணிகிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் ேகட்டு ஆர்ப்பாட்டம்
திருவெண்காடு அருகே மணிக் கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட சாலைக்கார தெருவில் குடிநீர் சரிவர பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நேற்று அந்த பகுதி மக்கள் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலர் சந்தோஷ் குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கலைந்து சென்றனர்
அப்போது அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சீராக குடிநீர் வினியோகிக்கவும், புதிய கைப் பம்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.