மக்கள் தொடர்பு முகாம்


மக்கள் தொடர்பு முகாம்
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாவடுதுறை ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. திருவாவடுதுறை, திருவாலங்காடு, மாதிரிமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான இந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு குத்தாலம் தாசில்தார் கோமதி தலைமை தாங்கினார்.சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சண்முகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லக்குட்டி, ஒன்றிய குழு உறுப்பினர் நாகலட்சுமி முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் வரவேற்றார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி கலந்து கொண்டு ஓய்வூதிய பயனாளிகளுக்கு வேட்டி,சேலை உள்ளிட்டவற்றை வழங்கினார்.மேலும் ஓய்வூதிய மனு, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, இஸ்திரி பெட்டி, காது கேட்கும் கருவி, மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல் உள்ளிட்ட மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.அப்போது அவர் கூறுகையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றார். இதில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜவள்ளி பாலமுருகன், லட்சுமி செல்வம், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் திருவாவடுதுறை ஊராட்சி செயலர் உத்திராபதி நன்றி கூறினார்.


Next Story