மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா, புல்லக்கடம்பன் ஊராட்சி மருங்கூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், புல்லக்கடம்பன் ஊராட்சி தலைவர் மாதவி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் 146 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 62 ஆயிரத்து 836 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக அனைத்துத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஒடவயல் ராஜாராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலைராஜன், சந்திரமோகன், தாசில்தார் கார்த்திகேயன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயக மூர்த்தி, திருவாடானை ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் தேளூர் அய்யப்பன், ஊராட்சி துணை தலைவர் மனோகரன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.