மக்கள் தொடர்பு திட்ட முகாம்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x

சிவகாசி அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட சித்துராஜபுரம் பஞ்சயாத்து பகுதியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் லீலாவதி சுப்புராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராம மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி, சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் கலந்து கொண்டு 248 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்கள் 60 பேர் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். சித்துராஜபுரம் பகுதியில் பல்வேறு பகுதியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு உறுதுணையாக இருந்த யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். முடிவில் தாசில்தார் லோகநாதன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story