மக்கள் தொடர்பு திட்ட முகாம்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காடியாரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் அடுத்த மாதம் 8-ந் தேதி நடக்கிறது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள காடியார் கிராமத்தில் அடுத்த மாதம்(மார்ச்) 8-ந் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி காடியார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர், திருக்கோவிலூர் கோட்டாட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஆகியோர் முன்னிலையில், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களால் பெறப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை வருகிற 21-ந் தேதிக்குள் மேற்கண்ட அலுவலர்களிடம் கொடுத்து பயன்பெறுமாறு திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story