நீர்வரத்து கால்வாயை மூடியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


நீர்வரத்து கால்வாயை மூடியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

கந்திலி அருகே நீர்வரத்து கால்வாயை மூடியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

கந்திலி அருகே நீர்வரத்து கால்வாயை மூடியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கால்வாய் மூடல்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் உடையமுத்ததூர் ஊராட்சி மாங்குப்பம் கிராமத்திற்கு அருகே உள்ள ஜங்காமபுரம் பகுதியில் உள்ள குட்டை நிரம்பி நீர்வரத்துகால்வாய் வழியாக மாங்குப்பம் ஏரிக்கு தண்ணீர் வருவது வழக்கம்.

தற்போது பெய்துவரும் தொடர் மழையால் ஏரிக்கு தண்ணீர் வரும் நிலையில் அந்தப் பகுதியில் உள்ள தனி நபர் ஒருவர் நீர்வரத்து கால்வாய் அவரது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறி பொக்லைன் எந்திரம் மூலம் நீர்வரத்து கால்வாயை மண் கொட்டி மூடி உள்ளார்.

பொதுமக்கள் சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு பல ஆண்டுகளாக இந்த கால்வாய் உள்ளதாகவும், நீர்வரத்து கால்வாயை மூடினால் ஏரிக்கு செல்லும் நீர் முழுவதும் ஊருக்குள் புகுந்து வீடுகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறி மாங்குப்பம்-கந்திலி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே‌.எஸ்.அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன் மற்றும் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story