பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
x

திருப்பத்தூர் அருகே ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தை பல மாதங்களாகியும் மூடாததால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தை பல மாதங்களாகியும் மூடாததால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராட்சத பள்ளம்

திருப்பத்தூர்- சேலம் மெயின் ரோடு பஞ்சனம்பட்டி கிராமம் அருகே உள்ள வாலேரி ஏரியில் இருந்து ராவுந்தம்பட்டி கிராமத்தில் உள்ள கொரட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுசெல்ல சேலம் மெயின் ரோட்டில் இருந்து ராவுந்தம்பட்டி வழியாக பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 20 அடி அகலம், 30 ஆழத்தில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது.

இதனால் பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் பைப்புகளை புதைத்து பள்ளங்களை மூட வேண்டும், என பலமுறை பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனககூறப்படுகிறது.

சாலை மறியல்

8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென சேலம் மெயின் ரோட்டிலிருந்து ராவுந்தம்பட்டி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த பள்ளத்தால் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியரில்லை, குடிநீர் எடுத்து செல்ல முடியவில்லை, குழந்தைகள், மூதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை, கடந்த மாதம் இந்தக் குழிக்குள் விழுந்து ஒருவர் இறந்து விட்டார். எனவே உடனடியாக குழிகளை மூடவேண்டும் என கூறினார்கள்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story