கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்


கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்
x

கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நலத்திட்ட உதவி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி 16 பேருக்கு ரூ.1.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பரிசு தொகுப்புகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொடிநாளின் முக்கிய நோக்கம், நாட்டின் குடிமக்களை பாதுகாக்க படைவீரர்கள் உயிரையும், உடலையும் பணயம் வைத்து கடமையாற்றி வருகின்றனர். நம் தாய் நாட்டிற்காக அரும்பணியாற்றும் முப்படை வீரர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு பொதுமக்கள் கொடிநாள் நிதியினை நன்கொடையாக வழங்குவதாகும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பினை அளிப்பது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு மறுவாழ்வு, மீள் குடியேற்றம், நலத்திட்டங்கள் வழங்குவதற்கு உதவியாக இருக்கும்.

பங்களிப்பை வழங்க வேண்டும்

கடந்த ஆண்டு மட்டத்திற்கு கொடிநாள் இலக்காக ரூ.28 லட்சம் நிர்ணக்கப்பட்டு, ரூ.55 லட்சத்து 95 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இலக்கு ரூ.31 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். ஆகையால் அனைத்து பொதுமக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, தனித்துணை கலெக்டர் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், முன்னாள் படைவீரர் நல அலுவலக நல அமைப்பாளர் கேப்டன் சீ.சாமுவேல் (ஓய்வு), தாசில்தார் சிவப்பிரகாசம், சம்பத், முன்னாள் படைவீரர் குடும்ப உறுப்பினர்கள், முப்படை வீரர்கள் நலச்சங்க தலைவர் மகேந்திரன், துணை தலைவர் அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காலையில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஷா முன்னாள் படை வீரர்கள் நலனுக்காக கொடிநாள் வசூலை உண்டியல் மூலம் வழங்கி தொடங்கி வைத்தா. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story