அரியமங்கலம் மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


அரியமங்கலம் மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

அரியமங்கலம் மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை யிட்டனர்.

திருச்சி

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டு செங்குளம் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மைப் பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், திருச்சி மாநகரை தூய்மையாக்கும் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதி என்பதால் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும், மழை நீர் தேக்கம், பாதாள சாக்கடை பிரச்சினை மற்றும் தெருவிளக்கு அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி திருச்சி மாநகராட்சி பணியாளர்கள் அரியமங்கலம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பங்கேற்றனர். தகவல் அறிந்த அரியமங்கலம் மண்டல உதவி ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story