விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் மணலூரை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில், விருத்தாசலம் மணலூரில் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். இதன் மூலம் கிடைக்கும் குறைந்த அளவு பணத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகிறோம். போதிய வருவாய் இல்லாததால் நாங்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றனர். தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story