கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகை


கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகை
x

குமாரபுரம் அருகே கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகை

கன்னியாகுமரி

தக்கலை,

குமாரபுரம் அருகே உள்ள சித்திரங்கோடு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து கல், ஜல்லி போன்ற கனிம வளங்கள் தினமும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், உள்ளூர் தேவைகளுக்கு கனிம வளங்கள் கிடைப்பதில்லை என கூறி நேற்று உள்ளூர் மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டனர். இதனால், கல்குவாரிக்கு வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் வரிசையாக நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கொற்றிகோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன் உள்ளூர் தேவைக்கு முதலில் கனிமவளங்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story