தொல்பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்ட பொதுமக்கள்
தொல்பொருட்கள் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் உச்சிமேடு பகுதியில் அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள் கண்காட்சியினை நேற்று முன்தினம் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்தநிலையில் நேற்று விடுமுறைதினம் என்பதால் இந்த கண்காட்சியை குடும்பத்தினருடன் சேர்ந்து வந்து திரளான பேர் பார்த்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தங்க அணிகலன், வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட மண்பாண்ட பொருட்களை பார்வையிட்டு அதன் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story