தென்காசியில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை மக்கள் நலப்பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். கடையநல்லூர் ராஜேந்திரன், செங்கோட்டை பண்டார சிவன், சங்கரன்கோவில் சண்முகச்சாமி, ஆலங்குளம் பட்டு, குருவிகுளம் தர்மராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் புதியவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செந்தில் வேல், அந்தோணி செல்லத்துரைச்சி, பிச்சம்மாள், ராஜலட்சுமி, சண்முகச்சாமி, மாரியப்பன், மாரிச்சாமி, விஜயராம், திருமலைமுத்து, துரைச்சி, பேச்சித்தாய் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் நலப்பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கடையநல்லூர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.