அரசு பஸ்சை நிறுத்தி டிரைவர்- கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்


அரசு பஸ்சை நிறுத்தி டிரைவர்- கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
x

அய்யம்பேட்டையில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்ததால் அரசு பஸ்சை நிறுத்திய பொதுமக்கள் டிரைவர்-கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டையில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்ததால் அரசு பஸ்சை நிறுத்திய பொதுமக்கள் டிரைவர்-கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சுற்றி ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் அய்யம்பேட்டை அருகே ரயிலடி, வடக்கு மாங்குடி, அகரமாங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் இருந்து அகரமாங்குடி வரை டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ்சில் தான் இந்த பகுதி மாணவ, மாணவிகள் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதிக்கு ஒரே ஒரு அரசு பஸ் இயக்கப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் கூட்டம் நிரம்பி வழியும். பல நாட்களில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிய படி தான் பயணம் செய்வது வழக்கம்

பஸ்சை நிறுத்திய பொதுமக்கள்

இதே போல நேற்றும் பஸ்சில் இருக்கைகள் கிடைக்காமல் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். இதைக் கண்ட பொது மக்கள் அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே சென்ற பஸ்சை தடுத்து நிறுத்தினர்.

பின்பு இவ்வளவு மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்களே? ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது? யார் பொறுப்பேற்பது? என கண்டக்டர், டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதையடுத்து பஸ்சில் கூட்டத்தை குறைப்பதற்காக, படிக்கட்டில் பயணம் செய்த சிலரை கண்டக்டர் உடனடியாக இறக்கி வேறு பஸ்சில் வருமாறு அனுப்பி வைத்தார். இதையடுத்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story