வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் வெளியிட்டார்.
இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலகம், அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் யாருக்கும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில்
எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story