புது வாங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
புது வாங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
புது வாங்கலம்மன் கோவில்
கரூர் காவிரி ஆற்றின் தென்கரையில் வாங்கல் கிராமத்தில் வரகுண்ணா பெருங்குடி குல குடிப்பாட்டு மக்களுக்கு குலதெய்வமாக புது வாங்கலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 14 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது கோவில் புனரமைப்பு செய்யப்பட்டது. அப்போது கோவில் உட்புறம் சப்த கன்னிமார்கள் சிலை பிரதிஷ்டை செய்தும், கோபுரங்கள் பொன் வர்ணம் தீட்டியும், பல திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்றது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதையடுத்து கோவிலில் யாகசாலைகள் அமைத்து சிவாச்சாரியார்கள் கடந்த 23-ந் தேதி கும்பாபிஷேகத்தை முதல் கால யாகபூஜையுடன் தொடங்கினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 6-ம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்பட பல்ேவறு பூைஜகள் நடந்தன. ெதாடா்ந்து யாகசாலையில் ைவத்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கையில் ஏந்தியவாறு கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து ராஜகோபுரத்தினை வந்தடைந்தனர்.
கும்பாபிஷேகம்
பின்னர் புது வாங்கலம்மன் ராஜகோபுரத்தில் புனிதநீரை சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டும், புனிதநீரும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை 4 மணி வரை அன்னதானம் நடைபெற்றது. இதற்காக 4 இடங்களில் பிரமாண்ட அன்னதான கூடம் அமைக்கப்பட்டிருந்தது.
திரளான பக்தா்கள்
கும்பாபிஷேகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட கரூர், ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம் பகுதிகளில் இருந்து புது வாங்கலம்மன் கோவில் குடிப்பாட்டு மக்கள், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்தா டாக்டர் சிவக்குமார், திருப்பணி குழுத்தலைவர் வீரப்பன், புது வாங்கலம்மன் திருப்பணி குழு உறுப்பினர்கள், புது வாங்கலம்மன் சேவா அறக்கட்டளை உறுப்பினர்கள், வரகுண்ணா பெருங்குடி குல குடிப்பாட்டு பங்காளிகள் செய்திருந்தனர்.