புதுச்சேரி: டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு


புதுச்சேரி: டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 Sept 2023 4:15 PM IST (Updated: 13 Sept 2023 4:58 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ,

கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகியுள்ளது. கிட்டத்தட்ட இந்த காய்ச்சலால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி காயத்ரி என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெங்கு அறிகுறி இருந்ததன் அடிப்படையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் இன்று காலை கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கல்லூரி மாணவி டெங்குவால் உயிரிழந்ததாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story