திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தரிசனம்


திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தரிசனம்
x

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தரிசனம் செய்தார்.

திருச்சி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு நேற்று காலை புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வருகை தந்தார். அவர் எமதர்மர் சன்னதிக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். சுமார் 20 நிமிடங்கள் அங்கு இருந்த அவர் தொடர்ந்து கோவில் கொடி மரத்தை சுற்றி வந்து வழிபட்டார். பின்னர் நீலிவனநாதரை தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த நாராயணசாமியை கோவில் நிர்வாகம் சார்பில், வரவேற்று பிரசாதம், தலவரலாறு புத்தகம், சாமி-அம்பாள் உருவப்படம் வழங்கப்பட்டது.


Next Story