புதுக்கோட்டையில் மரக்கன்று வழங்கும் விழா
புதுக்கோட்டையில் மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
தூத்துக்குடி
சாயர்புரம்:
புதுக்கோட்டை மரம்வரம் குழு சார்பாக இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா புதுக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் தலைமை தாங்கினார். மரம் வரம் குழு இயக்குனர் ராமன் முன்னிலை வகித்தார். மரக்கன்றுகளை ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி பள்ளி மாணவ, மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மரம்வரம் குழு உறுப்பினர் விஜி.சைமன், ஜெபஸ்டின், சிவகார்த்திகேயன், ஆசிரியர் ஜெயசிங் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story